Nojoto: Largest Storytelling Platform

Best aasaitamilquotes Shayari, Status, Quotes, Stories

Find the Best aasaitamilquotes Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutallah se aas with shayri 0, online mobile sabse sasta 5000 ke aas pass book khone ki shayari ka kya is very very, aas pass dushmno ke liye jaardar shayari in hindi, oru vidha aasai the temptation of maari, aas mata ki kahani in hindi,

  • 1 Followers
  • 1 Stories

Kalai Selvi

#தமிழ்கவிதைகள் #குழந்தைமனம் #aasaitamilquotes

read more
குழந்தையாய் இருந்த என்னை அள்ளி அணைத்து அன்னை

தோளோடு கொஞ்சிய நேரத்தில் தவழ ஏங்கினேன்.. தத்தி தாவி தந்தை அரவணைப்பில் தவழ்ந்த பொழுதில் நடக்க ஏங்கினேன்..

பாதம் ஊன்றி தாத்தா பாட்டி கை பிடித்து நடைப்பழகிய

நேரத்தில் துள்ளி ஓட ஏங்கினேன்..

ஆடி பாடி நண்பர்களோடு விளையாடிய தருணங்களில் அரும்பு மீசை முறுக்கி திமிர் கொள்ள ஏங்கினேன்...

நாட்கள் நகர்ந்தது..வருடங்கள் ஓடியது..

ஏங்கிய அனைத்தும் நிகழ்ந்தது... கை நிறைய சம்பளம்..அன்பான மனைவி.. அருமையான குழந்தைகள்.. அழகான வீடு...

உனக்கென்னப்பா நல்ல வாழ்க்கை என்று அடுத்தவர்

பொறாமைப்படும் வாழ்க்கை தான்.. ஆனாலும்... மனதின் ஓரத்தில் சட்டென்று சில தருணங்களில் ஒரு ஏக்கம் எட்டி பார்க்கதான் செய்கிறது..

23 பசித்தால் அழும்.. கொஞ்சினால் சிரிக்கும்.. ஏமாற்றம், பகை, போராட்டம், சுழ்ச்சி, திமிர், போட்டி இப்படி ஏதும் அறியா

குழந்தையாய் மீண்டும் ஒருமுரை வாழ்ந்திட. #தமிழ்கவிதைகள் #குழந்தைமனம் #aasaitamilquotes

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile