அனைத்திற்கும் தொடக்கம் மனித பிறப்பு ஆனால் அது நடக்க காரணம் அன்பு..; தாய் தந்தை அவர்களின் தாய் தந்தையென அந்த பட்டியல் நீளும் ஒரு மனிதன் ஆகிய நான் பிறக்க, நான் பட்டியலிட்ட ஒவ்வொருவரும் பரஸ்பரம் தன் அன்பை அவர்கட்குள்ளே கொட்டித் தீர்த்திருக்க வேண்டும் அதனின் இரவலாய் இந்த "அன்பின் இரவல்" என்று அடையாளம் செய்துகொண்டேன் உண்மையில் அனைவரும் என் போன்ற அன்பின் இரவல்...தான் வணக்கம் தோழமைகளே! நிறைய பேர் புனைப்பெயரில் எழுதறீங்க. அதற்கான காரணம், அதன் பின்னே ஒளிந்திருக்கும் கதை என்ன? எல்லாரோடையும் பகிர்ந்துகொள்ளுங்கள்! புனைப்பெயர் இல்லாதவர்கள் ஏன் வேறொரு பெயர் வைக்கவில்லை அல்லது வைக்க விருப்பமில்லையா என்பதைக் கூறுங்கள். குறியீடு: #புனைப்பெயர்