Nojoto: Largest Storytelling Platform

சொல்லாத வார்த்தைகள் கொல்லாமல் போகாது போல வற்றாத கட

சொல்லாத வார்த்தைகள் கொல்லாமல் போகாது போல
வற்றாத கடலாய் காதல் கிடக்க
பற்றாது என பனிக்கட்டியாக நீ
நிற்காத இடமில்லை நெஞ்சக்கூட்டில்
இரவின் ஆசையை உனக்கு உறவாக்கி தருகிறேன் வா
விடியல் ஒவ்வொன்றும் உன் வசப்பட செய்கிறேன் வா

கீழ் வானின்
கார்த்திகை மாதத்து நாள்மீன் கூட்டத்தை
கீழ் இறக்கி வைக்க வா
நம் வீட்டு முற்றத்தில்
இருபத்தி ஏழு கார்த்திகை தீபங்களும் காத்துக்கிடக்கிறது
காந்தள் பூ உன் கைப்பட்டு 
கார்த்திகை கூட்டத்து நட்சத்திரங்களாக... நாள்மீன்- நட்சத்திரம்
.
கார்த்திகை கூட்டம்- கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.(Pleiades constellation)
.
காந்தள்- கார்த்திகை மாதத்தில் மிகுதியாக மலரும் பூ. கார்த்திகை பூ எனவும் கூறுவர்.
.
27 தீபங்கள்-தமிழர்கள் தம் இல்லங்களில் 27 தீபம் ஏற்றுவது வழக்கம். இவை 27 நட்சத்திரங்களை குறிக்கும்.