மழையே!!! காற்றில் தன்னந்தனியாக சுற்றி திரிந்த உன்னை அள்ளி ஒன்றாய் சேர்த்து தனது மடியில் அரவனைத்திருந்த மேகத்தை விட்டு நீ ஏன் கீழே குதித்து தப்பித்து வருகிறாய்? மேகத்தின் பாசத்தை நீ உணரவில்லையெனில் மீண்டும் நீராவியாக காற்றில் கலந்து செல் உன் மீது கொண்ட பாசம் சிறிதும் குறையாமல் உன்னை அனைத்துக்கொள்ளும் மேகங்கள். மழையே!! நீ மேகத்தில் இருந்து குதிப்பது உன் தவறில்லை உன்னால் மேகத்தையும் பிரிந்து இருக்க முடியவில்லை பூமியையும் பிரிந்து இருக்க முடியவில்லை. பூமியின் பாசமும் உன்னை ஈர்க்கிறது மேகத்தின் அன்பும் உன்னை ஈர்க்கிறது. இதற்கு காரணம் உன்னை ஒருவரோடும் சேராமல் தடுப்பதோ சூரியனின் சூழ்ச்சியே! #rain #coolbreeze #chill #yqbaba #yqquotes #மழை