கண்மணி யாரோ யாரறிவார் கண்ணின் மணியே நீயறியாய் கொண்டை குழல்முடிந்த காரிகையோ தண்டை அணிந்துவந்த தாயவளோ விண்ணுலகம் கண்ட வளைகரமோ மண்ணுலகம் கண்ட முத்தமிழோ. வணக்கம் தோழமைகளே! இன்றைய தலைப்பு / சொல் - கண்மணி! "கண்மணி" என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளது. கண்ணின் கருவிழி, செல்லமாக சொல்வது, ருத்ராட்சம் போன்றவை! "கண்ணின் மணி போன்றவளே கட்டியமுதே"