கனவுக்காதலன்.. உன் கண்கள் பார்க்க நான் தயங்கும் வேளையில் என் வதனம் திருப்பி நீ வம்பிழுக்க வேண்டும்..!! அந்தி வேளை உன் அரவணைப்பில் அழகாய் நான் உறங்க வேண்டும்..!! உன் அருகாமைக்காக அனுதினமும் நான் பிரார்த்திக்க வேண்டும்..!! நீ அருகில் இல்லாத அந்த நாட்களில்.. விடியும் வேளையிலும், அன்றைய நாள் முடியும் வேளையிலும் - உன் நினைவுகளுடன் நித்தம் நான் ஏங்க வேண்டும்..!! நித்திரை கொள்ளும் போதும் உன் நினைவுகளால் என் கனவுகளை நீ இம்சிக்க வேண்டும்..!! என்றும் என்னுறவாக என்னுள்ளே நீ வேண்டும்..!! #ninaika_Iyalaa_Nyabagangal #RenuWrites